ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy: AFP
ஸ்வியாடெக் 3-வது சுற்று ஆட்டத்தில் எம்மா ராடுகானு உடன் மோதினார்.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), எம்மா ராடுகானு (இங்கிலாந்து) உடன் மோதினார்.
இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-1 மற்றும் 6-0 என்ற நெர் செட் கண்க்கில் எம்மா ராடுகானுவை எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story