கனடா ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு தகுதி


கனடா ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு தகுதி
x

photo credit: AP /PTI 

தினத்தந்தி 4 Aug 2025 5:07 PM IST (Updated: 4 Aug 2025 5:11 PM IST)
t-max-icont-min-icon

டெய்லர் பிரிட்ஸ் 4-வது சுற்றில் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.

டொராண்டோ,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் டென்னிஸ் தொடர் அங்குள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) - ஜிரி லெஹெக்கா (செக்) உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை டெய்லர் பிரிட்ஸ் கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை லெஹெக்கா கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை டெய்லர் பிரிட்ஸ் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். பிரிட்ஸ் இந்த ஆட்டத்தில் 7-6, 6-7 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

பிரிட்ஸ் காலிறுதியில் ஆந்த்ரே ருப்லெவ் உடன் மோத உள்ளார்.

1 More update

Next Story