செங்டு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பிராண்டன் நகாஷிமா

கோப்புப்படம்
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
பீஜிங்,
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மார்கோஸ் ஜிரோன், சக நாட்டவரான பிராண்டன் நகாஷிமா உடன் மோதினார்.
இந்த மோதலின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் பிராண்டன் நகாஷிமாவும், ஆட்டத்தின் 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் மார்கோஸ் ஜிரோனும் கைப்பற்றினர்.
இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இதில் அபாரமாக செயல்பட்ட பிராண்டன் நகாஷிமா 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் மார்கோஸ் ஜிரோனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story






