சீன ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் ஜானிக் சினெர் - அல்காரஸ் இன்று மோதல்


சீன ஓபன் டென்னிஸ்;  இறுதிப்போட்டியில் ஜானிக் சினெர் - அல்காரஸ் இன்று மோதல்
x
தினத்தந்தி 2 Oct 2024 12:53 AM GMT (Updated: 2 Oct 2024 1:50 AM GMT)

ஸ்பெயின் வீரர் அல்காரஸ் , ரஷிய வீரர் மெத்வதேவ் ஆகியோர் மோதினர் .

பீஜிங்,

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் ஜானிக் சினெர் 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சீன வீரர் யுஞ்சோகெட் பு-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் , ரஷிய வீரர் மெத்வதேவை 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் .

இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஜானிக் சினெர் - அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர்



Next Story