சீனா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் மரியா சக்காரி

கோப்புப்படம்
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகெர் உடன் மோதினார்.இதில் அதிரடியாக ஆடிய மரியா சக்காரி முதல் செட்டை 7-6 (7-5) என வென்றார்.
இதற்கு பதிலடியாக அமெரிக்க வீராங்கனை 7-6 (7-5) என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இதில் அபாரமாக செயல்பட்ட மரியா சக்காரி 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story






