பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜெசிகா, கோகோ காப் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜெசிகா, கோகோ காப் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

அமெரிக்காவின் கோகோ காப், ஆஸ்திரேலியாவின் ஒலிவியா காடெக்கியை எதிர்கொண்டார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ரொமானியாவின் அன்கா டோடோனி உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட ஜெசிகா பெகுலா 6-2 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்கா டோடோனியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், ஆஸ்திரேலியாவின் ஒலிவியா காடெக்கியை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

1 More update

Next Story