மீண்டும் டென்னிஸ் களம் திரும்புகிறாரா செரீனா வில்லியம்ஸ்..? அவரே கொடுத்த விளக்கம்

செரீனா வில்லியம்ஸ் 2022-ம் ஆண்டுக்கு பிறகு டென்னிசில் இருந்து ஒதுங்கினார்.
நியூயார்க்,
டென்னிசில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான பிரபல வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் (வயது 44) 2022-ம் ஆண்டுக்கு பிறகு டென்னிசில் இருந்து ஒதுங்கினார். இந்த நிலையில் அவர் ஊக்க மருந்து சோதனைக்கு தன்னை உட்படுத்தும் வகையில் ஊக்க மருந்து தடுப்பு முகமையில் தனது பெயரை மீண்டும் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் டென்னிஸ் களம் திரும்ப போகிறார் என்று தகவல் பரவியது.
இந்நிலையில் இந்த தகவல்களை மறுத்துள்ள செரீனா வில்லியம்ஸ் மீண்டும் களம் காணும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






