ஜப்பான் ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்


ஜப்பான் ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய போபண்ணா ஜோடி 7-6 (7-5), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

1 More update

Next Story