மியாமி டென்னிஸ்: முதல் சுற்றில் கேத்ரினா சினியகோவா வெற்றி


மியாமி டென்னிஸ்: முதல் சுற்றில் கேத்ரினா சினியகோவா வெற்றி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 March 2025 2:00 AM IST (Updated: 19 March 2025 2:01 AM IST)
t-max-icont-min-icon

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்று தொடங்கியது.

புளோரிடா,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு), யு யுவானை (சீனா) சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் 6-2, 2-6, 7-6 (4) என்ற செட் கணக்கில் யு யுவானை (சீனா) வீழ்த்தி கேத்ரினா சினியகோவா வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் போலந்தின் லினெட் 7-6 (3), 6-2 என்ற நேர் செட்டில் ரஷியாவின் பாவ்லிசென்கோவை வீழ்த்தினார்.

1 More update

Next Story