மான்டி கார்லோ டென்னிஸ்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி


மான்டி கார்லோ டென்னிஸ்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி
x

image courtesy:PTI

தினத்தந்தி 12 April 2025 6:57 PM IST (Updated: 12 April 2025 8:19 PM IST)
t-max-icont-min-icon

அல்காரஸ் அரையிறுதியில் டேவிடோவிச் உடன் மோதினார்.

மான்டி கார்லோ,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், சக நாட்டவரான டேவிடோவிச் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை போராடி கைப்பற்றிய அல்காரஸ், 2-வது செட்டை எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். அல்காரஸ் இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் இறுதிப்போட்டியில் லோரென்சோ முசெட்டி அல்லது அலெக்ஸ் டி மினார் உடன் மோதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story