பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்


பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

image courtesy:twitter/@RolexPMasters

ஸ்வெரெவ் காலிறுதியில் மெத்வதேவ் உடன் மோதினார்.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்வெரெவ் (ஜெர்மனி) - மெத்வதேவ் (ரஷியா) மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ஸ்வெரெவ் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஸ்வெரெவ் இந்த ஆட்டத்தில் 2-6, 6-3 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் அரையிறுதியில் ஜானிக் சினெருடன் மோத உள்ளார்.

1 More update

Next Story