மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்புக்கு ரைபகினா தகுதி

கோப்புப்படம்
பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ,
பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதியில் உலக தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் விக்டோரியா எம்போகோவை (கனடா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சவுதி அரேபியாவில் நடக்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கடைசி வீராங்கனையாக ரைபகினா தகுதி பெற்றார்.
ஏற்கனவே சபலென்கா (பெலாரஸ்), ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காப், அமன்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா (4 பேரும் அமெரிக்கா), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி) ஆகியோரும் இடத்தை உறுதி செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






