வியன்னா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஸ்வேரெவ்

கோப்புப்படம்
இறுதிப்போட்டியில் ஸ்வேரெவ், இத்தாலியின் ஜானிக் சின்னெர் உடன் மோத உள்ளார்.
வியன்னா,
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி) - லோரென்சோ முசெட்டி (இத்தாலி) ஆகியோர் மோதினர்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய அலெக்சாண்டர் ஸ்வேரெவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் முசெட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வேரெவ், இத்தாலியின் ஜானிக் சின்னெர் உடன் மோத உள்ளார்.
Related Tags :
Next Story






