விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

கோப்புப்படம்
இகா ஸ்வியாடெக் (போலந்து), அமெரிக்காவின் கேட்டி மெக்னலி உடன் மோதினார்.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), அமெரிக்காவின் கேட்டி மெக்னலி உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இகா ஸ்வியாடெக் இழந்தார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்த இரு செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கேட்டி மெக்னலியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இகா ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட கேட்டி மெக்னலி தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :
Next Story