பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.137 கோடியாகும்
ரியாத்,
ஆண்டுதோறும் முன்னணி 8 வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.
ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.137 கோடியாகும். முதல் நாளில் ஸ்வியாடெக்- மேடிசன் கீஸ், அனிசிமோவா- ரைபகினா சந்திக்கிறார்கள்.
Related Tags :
Next Story






