வறண்ட பாலைவனம்


வறண்ட பாலைவனம்
x

உலகின் பெரிய பாலைவனங்களில் ஒன்றாக `அட்டகாமா பாலைவனம்’ திகழ்கிறது.

இது சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசிபிக் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ளது. இதனை உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று, நாசா மற்றும் தேசிய புவியியல் கழகம் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இப்பாலைநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,05,000 சதுர கி.மீ (41,000 சதுர மைல்) ஆகும். இந்த இடம் சராசரியாக ஆண்டுக்கு ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைக்கு பெறுகிறது.

இரண்டு மலைத் தொடர்கள் (சிலி கடற்கரைத் தொடர் மற்றும் ஆண்டிஸ் மலைகள்), அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் இருந்து ஈரப்பதம் செல்வதைத் தடுத்து விடுவதே குறைவான மழைப்பொழிவுக்கு காரணம். அட்டகாமாவில் 1570 முதல் 1971 வரை குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லை என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. வறண்ட காலநிலையில் வளரும் கற்றாழை, சதைப்பற்றுள்ள தாவரங்கள் இந்தப் பாலைவனத்தில் காணப்படுகின்றன. இந்த கற்றாழை இனங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் மற்றும் 70 சென்டிமீட்டர் (28 அங்குலம்) விட்டம் கொண்டவை. இந்த இடத்தில் இருக்கும் மண், செவ்வாய் கிரகத்தில் உள்ளதைப் போலவே இருப்பதால், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான `நாசா' செவ்வாய் கிரகத்தின் பயணங்களுக்கான கருவிகளை சோதிக்க இந்த இடத்தை பயன்படுத்துகிறது.


Next Story