அரோராஸ்
துருவ ஒளி என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது.
சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் காந்தப்புயலின் காரணமாக வெளியேற்றப்படும் மின்னணுக்களால் துருவப்பகுதிகளில் நள்ளிரவு வானத்தில் வாணவேடிக்கையின் போது உருவாகும் பலவண்ண ஒளிச்சிதறல் போன்ற காட்சி தோன்றுகிறது. இதுவே அரோராஸ் எனப்படுகிறது. தென்துருவப்பகுதியில் காணப்படும் இந்நிகழ்வு அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் எனவும், வடதுருவ பகுதியில் காணப்படும் இந்நிகழ்வு அரோரா பொரியாலிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வில் பிரகாசமான இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிற ஒளி வானத்தில் வட மற்றும் தென்காந்த துருவப்பகுதியில் தோன்றும்.
Related Tags :
Next Story