உடல் குளிரும்போதெல்லாம் ஜலதோஷம் பிடிக்குமா?


உடல் குளிரும்போதெல்லாம் ஜலதோஷம் பிடிக்குமா?
x

நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து, நம்மை பிடிக்கும் வாய்ப்பை ஜலதோஷம் தேடுகிறது.

ஆம்..! அதனால்தானே அதை 'காமன் கோல்ட்' என்று சொல்கிறோம்..! ஜலதோஷத்துக்கு காரணமாகும் பிரதான வைரஸான 'ரைனோவைரஸ்' எந்த நேரமும் நம்மைச் சுற்றியே உலவுகிறது.

நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து, நம்மை பிடிக்கும் வாய்ப்பை ஜலதோஷம் தேடுகிறது.

ஜலதோஷம் பற்றி இதுவரை நடந்த ஏராளமான ஆராய்ச்சிகளில் எண்ணற்ற முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஐஸும், நீரும் நிரம்பிய பாத்திரத்தில் 20 நிமிடங்கள் கால் வைத்திருந்த நபர்களில் பலருக்கு, 5 நாட்களுக்குப் பிறகு ஜலதோஷ அறிகுறிகள் தென்பட்டன.

ஐஸ் இல்லாத பாத்திரத்தில் கால்களை வைத்திருந்தவர்களில் சொற்பமானவர்களுக்கு மட்டுமே ஜலதோஷம் எட்டிப் பார்த்தது. மூக்கு மற்றும் தொண்டையின் ரத்த நாளங்கள் குளிர்ச்சி காரணமாக கொஞ்சம் சுருங்குவதால், ரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாடு குறையலாம். அவைதானே நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட வேண்டும், அதனால்தான் உடல் குளிரும் போதெல்லாம் ஜலதோஷம் பிடிக்கிறது.


Next Story