வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 'கறகால் பூனைகள்'
எகிப்து நாட்டில் பழங்காலத்தில் இந்தப் பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டு, வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென்மேற்கு ஆசியா, இந்தியா ஆகிய இடங்களை இருப்பிடமாகக் கொண்டது, 'கறகால் பூனை'. இது ஒரு காட்டுப் பூனை. இந்தப் பூனையின் உடல் சுற்றளவு சுமார் 3.3 அடி ஆகும். 'கற கால்' என்ற இப்பூனையின் பெயர், துருக்கி மொழியில் இருந்து வந்தது.
துருக்கியில் 'கறகால்' என்பதற்கு 'கருப்புக்காது' என்று பொருள். குறுகலான முகமும், நீண்ட கோரைப் பற்களும் கொண்ட கறகால் பூனையின், காது தனித்தன்மை வாய்ந்தது. சுமார் 4.4 சென்டி மீட்டர் உயரத்தில் முக்கோண வடிவில் நீண்ட காதுகளைக் கொண்டது.
காதுகளின் மேற்பகுதியில் கொத்தாக முடிகள் இடம்பெற்றிருக்கும். நீண்ட கால்கள், குட்டையான வால் கொண்டது. உடல் முழுவதும் செந்நிற மும், சாம்பல் நிறமும் கலந்திருக்கும். வயிற் றுப்பகுதியில் மங்கலான மஞ்சள் அல்லது வெள்ளை நிறம் அமைந்திருக்கும்.
ஒல்லியான உடலமைப்பைப் பெற்றிருந்தாலும், இந்தப் பூனையின் உடற்கட்டு மிகவும் வலிமையானது. ஊன் உண்ணியான இந்த கறகால் பூைன, பறவைகள், அணில், சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடி இரையாகக் கொள்ளும். பற வைகளை தரையில் இருந்து சுமார் 3 மீட்டர் (9.8 அடி) உயரம் வரை குதித்துப் பிடிக்கும் தன்மை பெற்றது. இதன் இனப்பெருக்க காலம் இரண்டு முதல் மூன்று மாதங்கள்.
ஒரு பிரசவத்தில் ஆறு குட்டிகள் வரை ஈனும். இதன் வாழ்நாள் அளவு சுமார் 10 ஆண்டுகள். ஆனால் வீட்டில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் போது இதன் ஆயுட் காலம் மேலும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை அதிகரிக்கும். எகிப்து நாட்டில் பழங்காலத்தில் இந்தப் பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டு, வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.