பிரமாண்ட வண்டு


பிரமாண்ட வண்டு
x

கோலியாத் வண்டுகள், உலகில் உள்ள வண்டு இனத்தில் மிகப்பெரியதாகும். இவை ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் காணப்படுகின்றன.

ஆண் வண்டுகள் 6 முதல் 11 செ.மீ நீளமும், பெண் வண்டுகள் 5 முதல் 8 செ.மீ நீளமும் வளரும். இந்த வண்டுகள் 80 முதல் 100 கிராம் எடை கொண்டவை. இவை வெள்ளை-பழுப்பு, வெள்ளை-கருப்பு அல்லது கருப்பு நிறங்களில் காணப்படுகின்றன.

ஆண் கோலியாத் வண்டுகளின் தலையில் ஆங்கில எழுத்தான ஒய் (Y) வடிவ கொம்புகள் உள்ளன. இவை எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ள உதவுகிறது. பெண் கோலியாத் வண்டுகளின் தலை குடைமிளகாய் வடிவில் இருக்கும். இது மண்ணில் துளையிடுவதற்கு பயன்படுகிறது. ஆறு கால்கள் மற்றும் கூர்மையான நகங்களை கொண்டுள்ள இவற்றின் கால்கள் மிகவும் வலிமையானவை. அவை மரங்களில் ஏற பயன்படுகின்றன. இவ்வண்டு, தன் எடையை விட 850 மடங்கு அதிகமான எடையை சுமந்து செல்லும் திறனுடையது. மரத்தின் சாறு மற்றும் அழுகிய பழங்கள் இவற்றின் விருப்பமான உணவு. கோலியாத் வண்டுகள் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அவை அழுகும் தாவரம் மற்றும் இறந்தவிலங்குகளின் உடல்களை சிதைக்கிறது.

1 More update

Next Story