ஒரு டி.எம்.சி என்றால் எவ்வளவு தண்ணீர் தெரியுமா?


ஒரு டி.எம்.சி என்றால் எவ்வளவு தண்ணீர் தெரியுமா?
x

ஒரு டி.எம்.சி நீர் என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும். 1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் ஆகும்.

பருவமழை காலத்தில் இவ்வளவு கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது அல்லது இத்தனை டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டது என்ற வார்த்தைகளை ஒவ்வொரு முறையும் கேட்கிறோம். ஆனால் அதற்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா?. அணைகளுக்கு வரும் மற்றும் வெளியேறும் நீரின் அளவை குறிக்க `டி.எம்.சி' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் சேமிப்பு திறனை அளவிட டி.எம்.சி பயன்படுகிறது. ஒரு `டி.எம்.சி' என்பது ஆயிரம் மில்லியன் கன அடி என்பதன் சுருக்கமாகும். அதாவது ஒரு டி.எம்.சி நீர் என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும். 1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் ஆகும். அதன்படி ஒரு டி.எம்.சி என்பது 2,830 கோடி லிட்டர் ஆகும். ஒரு வினாடிக்கு ஒரு குழாய் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு `ஒரு கனஅடி' என்று அழைக்கப்படுகிறது. 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 24 லட்சம் லாரிகளில் தான் ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணை 1700 மீட்டர் அகலமும், 120 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் 93.4 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும்.


Next Story