கல்விக்கண் திறந்த காமராஜர்


கல்விக்கண் திறந்த காமராஜர்
x

மாநில மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் மதிய உணவு திட்டம், நிதியுதவி திட்டம், ஓய்வூதிய திட்டம் என பல சமூக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

காமராஜர் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விருதுநகரில் பிறந்தார். தந்தை குமாரசாமி நாடார், தாயார் சிவகாமி அம்மையார். இவர் அரசியல் ஆர்வலர் மற்றும் ஒரு முக்கிய இந்திய அரசியல்வாதி. இவர் ஏழ்மையான குடும்பத்தின் மகன். ஆரம்ப வாழ்க்கையில் நிறைய சவால்களை எதிர்கொண்டார்.

காமராஜரின் சமூக திட்டங்கள்:

இவர் 1954-ல் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 முதல் 1963 வரை மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது மாநில மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் மதிய உணவு திட்டம், நிதியுதவி திட்டம், ஓய்வூதிய திட்டம் என பல சமூக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

படிக்காத மேதை காமராஜர்:

கட்சியிலும், ஆட்சியிலும், பொது வாழ்விலும் கண்டிப்பிற்கு பெயர் பெற்றவர் காமராஜர். இவர் ஓர் புத்திசாலி மற்றும் எந்த பிரச்சினைகளையும் எளிதில் தீர்க்க கூடியவர். எனவே காமராஜரை படிக்காத ேமதை என்று அழைக்கின்றனர்.

காமராஜரால் நிறைவேற்றப்பட்ட பிற திட்டங்கள்:

காமராஜர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் மூடப்பட்ட ஆயிரம் தொடக்கப்பள்ளிகளை உடனடியாக திறக்க உத்தரவிட்டார். மாணவர்கள் பசியின்றி படிக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். 9 நீர்பாசனங்களை திறந்தார்.

சிறப்பு பெயர்கள்:

தென்னாட்டு காந்தி, கர்மவீரர், கல்விக்கண் திறந்தவர், ஏழைப்பங்காளர், கருப்பு காந்தி, தலைவர்களை உருவாக்குபவர், கிங்மேக்கர், விருதுப்பட்டி வீரர் என பல சிறப்பு பெயர்கள் இவருக்கு உண்டு.

முடிவுரை:

காமராஜர் அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்தார். காமராஜரின் பாரம்பரியம் இன்றும் மக்களை ஊக்குவிக்குகிறது. ஏழை-எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர அரும்பாடுப்பட்டார். காமராஜருக்கு முதலில் காமாட்சி என பெயர் உண்டு. பின்பு காமராஜர் என மாற்றிக்கொண்டார். காமராஜர் மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்ந்தார். ஏழை மக்கள் என்றெல்லாம் பார்க்காமல் எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகினார். இவர் 1972-ல் அக்டோபர் மாதம் 2-ந்தேதி இறந்தார்.


Next Story