அறிவின் ஆயுதம் புத்தகம்


அறிவின் ஆயுதம் புத்தகம்
x

நல்ல புத்தகங்கள் மனித மனங்களை அத்தனை அழகாக மாற்றுவதனால் இவை ஒரு அழகியல் என்றால் அது மிகையல்ல.

தொட்டு தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம். தொடர்ந்து படித்தால் வாழ்வில் வெற்றியின் ஆயுதம். அதுவே புத்தகங்கள். நான் வாசிக்காத புத்தகங்களை வாங்கி வந்து என்னை சந்திப்பவரே என் தலைசிறந்த நண்பர் என்றார் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். உலகின் சிறந்த தலைவர்கள் புத்தக வாசிப்பை இவ்வளவு தூரம் நேசித்தார்கள். ஏனென்றால் புத்தகங்கள் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது. அமைதி எனும் உயரிய ஞானத்தை வழங்கி தன்னை வாசிப்பவர்களை தலை நிமிர செய்கிறது.மனிதனுடைய உள்ளத்தில் உள்ள உணர்வுகளையும், அறிவையும் அனுபவத்தையும் திறன்களையும் பல வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் ஊடகமாக புத்தகங்கள் காணப்படுகின்றன.

நல்ல புத்தகங்கள் மனித மனங்களை அத்தனை அழகாக மாற்றுவதனால் இவை ஒரு அழகியல் என்றால் அது மிகையல்ல.நல்ல நண்பர்கள் எவ்வாறு தோழோடு தோழ் நிற்பார்களோ, மகிழ்ச்சி அளிப்பார்களோ, நல்வழி படுத்துவார்களோ, அது போல நல்ல புத்தகங்களும் நம்மை செதுக்கும்.

இதனால் தான் ஜீலியஸ் சீசர் 1000 புத்தகங்களை வாசித்தவர் ஒருவர் இருந்தால் அவரை காட்டுங்கள் அவரே எனது வழிகாட்டி என்றார். ஓர் நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்று கூறுவார்கள். ஆதலால் புத்தகங்களை எமது நண்பனாக்கி கொள்வது வாழ்வில் எம்மை உயர்த்தும். புத்தக வாசிப்பு மனிதனிடத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி சலனமில்லாத அமைதியையும், பொறுமையையும் தர வல்லது. சிறந்த பொறுமையையும், பிரச்சினைகளையும் சமாளிக்க வல்ல அனுபவங்களையும் புத்தகங்கள் தருகின்றன. ஆழமான அறிவினால் ஆக்கமான பேச்சாற்றலையும் தர வல்லதாகும். உலகின் பெரிய மாமேதைகள் அனைவரும் புத்தக வாசிப்பினால் உருவானவர்களே. சிறந்த சிந்தனைகளையும், கற்பனை திறனையும் உருவாக்குவன சிறந்த புத்தகங்களே ஆகும். மனிதனை நல்வழியில் இட்டு செல்வன நல்ல புத்தகங்கள் தான். இதனால் தான் வாசிப்பு மனிதனை பூரணமடைய செய்கிறது என்கிறார்கள். நல்ல புத்தகங்களை வாசித்து அதன் படி ஒழுகுபவர்கள் சிறந்த மனிதர்களாக இங்கே வாழ்கின்றனர்.

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது.அதாவது புத்தகங்களை மனிதன் வாசிப்பதனால் இங்கு குற்ற செயல்கள் குறைவடையும்.

ஒரு நூலகம் எரிக்கப்படுகின்ற போது அங்கு நல்ல மனிதர்களும் எரிக்கப்படுகிறார்கள் என்றார் சேகுவேரா நமது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி அறிவை மேம்படுத்த செய்வதில் புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மனிதனை அறிவுள்ளவனாய், பூரணத்துவம் பெற்றவனாய் மாற்றுவதில் புத்தகங்கள் பங்களிப்புச் செய்கின்றன.உலகின் பல கலாசார மற்றும் அறிவியல் தகவல்களை அறியவும், இலக்கிய சிந்தனையை விரிவுபடுத்தி கொள்ளவும் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிப்பதன் வாயிலாக ஒருவரின் சிந்தனை திறன் மேலோங்குவதுடன் சொல் வளமும், கற்பனை வளமும் பெருகும். உலகிற்கான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிய தத்துவ ஞானிகள் அனைவரும் ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அவற்றை உருவாக்கினார்கள். சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ், டார்வின், புத்தர் போன்றோரை இந்த உலகம் போற்றக் காரணம் அவர்களின் அறிவுக்கூர்மையே. புத்தகங்களால் மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்க முடியும்.

எனவே நாமும் புத்தகங்களை வாசித்து வாழ்வில் முன்னேறுவோம்.


Next Story