சித்ரவதையை ஒழிப்பதில் உறுதியேற்போம்...!
“சித்ரவதை” என்பது ஒரு தவறுக்கான தண்டனையாகவோ, ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக ஏற்கவைப்பதற்காகவோ, பாகுபடுத்தும் நோக்கத்திலோ, அச்சுறுத்தல் செய்வதற்காகவோ அல்லது வேண்டுமென்றே நடத்தப்படுகிறது.
"ஒருவர் தமக்கான உள்நோக்கத்துடன், தானாகவோ அல்லது தமது தூண்டுதலின் பேரிலோ, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னொருவர் மீது, உடல் ரீதியாகவோ, மன ரீதியாக வோ கடுமையான வலியையோ அல்லது மன வேதனை யையோ ஏற்படுத்துவதே சித்ரவதை" ஆகும். சித்ர வதை என்பதை 3 வகை யாகப் பிரிக்கலாம். முதலாவ தாக நமது வீடுகளில் நில வும் சித்திரவதை. 2-வதாக சமூகத்தில் நிலவும் சித்ரவதை. 3-வதாக மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே மக்கள் மீது நடத்தும் சித் ரவதை.
சித்ரவதையால் பாதிக்கப் பட்டவர்களை பாதுகாப்ப தற்கும், அவர்களுக்கான மறுவாழ்வை உறுதிபடுத்தவும், சர்வதேச சட்டங்கள் வழிவகைகளைச் செய்கின்றன. இதற்காக ஐ.நா மூலம் சர்வதேச உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி தற்போது பல்வேறு உலக நாடுகளில் சித்ரவதை என்பது முழுமையாக ஒழிக்கப்பட்டு வருகின்றது.
2-ம் உலகப் போருக்குப் பிறகு உலகில் சித்ரவதை என்ற கொடுமையே இருக்கக் கூடாது என்று ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலும் உறுப்பு நாடுகளும் திட்டமிட்டன. சித்ரவதையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் சித்ரவதையால் பாதிக்க படுவோருக்கு ஆதரவு தெரிவித்து ஆறுதல் அளித்து மன ரீதியாக தைரியப்படுத்தி அவர்களுக்கான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானித்தனர். இதற்காக முதலாவதாக 1984 -ம் ஆண்டு ஐநாவின் பொதுச் சபையில் சித்ரவதைகெதிரான ஓர் உடன்படிக்கை அறிமுகப் படுத்தப்பட்டது. 1987-ம் ஆண்டு முதற்கட்டமாக 20 நாடுகள் இந்த சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டன. அதன்பிறகு படிப்படியாக பெரும்பாலான நாடுகளும் ஏற்றுக் கொண்டுவிட்டன.
இந்தியாவும் சித்ரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் 1997-ல் கையொப்பமிட்டது. ஐ.நாவின் சித்ரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா 1997-ல் கையொப்பமிட்டு 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் சித்ரவதையை ஒழிப்பதற்காகவோ, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தகுந்த நடவ டிக்கைகளை எடுக்கவோ, எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
அப்பாவி மக்கள் மீது பல்வேறு வகையிலான வன்முறைகளும், சித்ரவதைகளும் நிகழ்த்தப்பட்டு வருவது தொடர் கதையாகவே உள்ளது. இது போன்ற அரசின் வன்முறைகளை கண்காணித்து அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளியிடுவதில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை தொடர்பான நிறுவனங்கள் போன்றோர் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இதற்காக இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றன.
இந்தியாவின் போலீஸ் நிலையங்களில் அப்பாவி மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் பல்வேறு விதமான சித்ரவதைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 மில்லியன் வழக்குகளில் சாதாரண அப்பாவி மக்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேசிய ஆவணக் காப்பகத்தின் 2014 -ம் ஆண்டின் அறிக்கையின் படி சத்தீஸ்கார் காவல் துறையால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் நடவைக்கைகள் குறித்து 3,105 புகார்கள் பெறப்பட் டது. இதில் 924 புகார்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட்டது.
உலகின் ஜனநாயக நாடுகளில் இந்தியா மிக முக்கியமான நாடாகும். இது போன்ற ஜனநாயக நாட்டில் சித்ரவதை என்பது இயற்கை யாகவே களையப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாகவே உள்ளது. அதாவது ஐநாவின் மனித உரிமைகளுக் கான பல்வேறு கூட்டங்களில் இந்தியாவிடம் பல்வேறு உலக நாடுகள் சித்திரவதையை ஒழிப்பதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
சித்ரவதையை முழுமையாக ஒழிப்பதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மற்றும் மாநில அளவிலான அனைத்து அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகளும் மற்றும் அனைத்து வெகுஜன அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும். மேலும் அனைத்து குடிமைச் சமூக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்.
"ஐ.நாவின் சித்ரவதைக்கெதிரான நாளில்" பல்வேறு அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றார்கள். சாதாரண மக்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாகமால் பாதுக்கக்கப்படுவதை அரசு உறுதிபடுத்த வேண்டும்.
மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதன் மூலம் தான் சித்ரவதை இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும். உலகில் சித்ரவதையை ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந்தேதியை "சித்ரவதைகளால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக" ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மேலும் சித்ரவதையை ஒழிப்பதில் ஒவ்வொரு தனி மனிதரும் உறுதியேற்க வேண்டும். குறிப்பாக சித்திரவதையை நமது வீடுகளில் மற்றும் சமூகத்தில் இருந்தே ஒழிக்க சபதமேற்க வேண்டும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.