சுதந்திரத்திற்கு வித்திட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


சுதந்திரத்திற்கு வித்திட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
x

சுதந்திரத்திற்கு முதன் முதலில் வித்திட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போசுக்கு 1992-ம் ஆண்டு பாரத ரத்னா விருதை அளித்து அரசு கவுரவித்தது.

சுதந்திர தினத்தை தலைவர்கள், தியாகிகள் மூலம்தான் நாம் பெற்றோம் என்பதை மறந்துவிடக்கூடாது. இதற்கான பல்வேறு சத்தியாகிரக போராட்டங்கள் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடந்து உள்ளன. இதில் வெள்ளைக் காரர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களில் எண்ணற்ற தலைவர்கள், தியாகிகள் உயிர்நீத்து உள்ளார் கள். அவர்களை இந்த தினத்தில் நாம் நினைவு கூர்ந்து போற்றி வருகிறோம்.

ஆனால் இந்த சுதந்திரத்திற்கு முதன் முதலில் வித்திட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார் என்று கூறினால் அது மிகையாகாது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி மேற்கு வங்கத்தில் உள்ள கட்டாக் பகுதியில் ஜானகிநாத் போசு-பிரபாவதி தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இந்த தம்பதிக்கு 8 ஆண் பிள்ளைகளும், 6 பெண் பிள்ளைகளும் இருந்தனர். இக்குடும்பத்தில், 9-வது குழந்தை யாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். 6 வயதான போது, கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ், ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ், 1913-ம் ஆண்டு தேர்வில் கொல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2-வது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியோர்களின் மேல் ஈடுபாடுகளை கொண்டு இருந்தார்.

தனது 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி 2 மாதங்கள் அலைந்தார். அப்போது, வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு, சுபாசின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். அதனால் தான், என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, அதன் பலனைப் பெற விரும்புகிறேன் என்று கூறி வந்த அவர் தன் மானசீக ஆசானாக, விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.

துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால், தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915-ம் ஆண்டு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எஃப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில், பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார்.

இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுபாஸ் சந்திர போசும் அவரது நண்பர்களும், கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், 2 ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாதபடி செய்யப்பட்டனர். இதனால், தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ் சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன், 1917-ம் ஆண்டு, இசுக் காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919-ம் ஆண்டு, இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன், மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த எமிலி செங்கல். இவர் இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜியின் செயலாளராக பணியாற்றினார். இவர் நேதாஜியின் மனைவியாக கருதப்படுகிறார். இவர்கள் இருவருக் கும் 1937-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலோ, 1941 அல்லது 1942-ம் ஆண்டு செருமனியின் பெர்லினிலோ திருமணம் நடந்திருக்கலாம் என கருதுகின்றனர். ஆனால் இதற்கான ஆதாரம் இல்லை. அனிதா போஸ் இவர்களின் மகள் என கூறுகின்றனர்.

1941-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி இரவிலிருந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை. தலைமறை வானாார். 1941-ம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று, ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. இந்திய தேசிய ராணு வத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ் சந்திர போஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட் டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட் டத்தில் விரும்பி சென்றமையால், ராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 -க் கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.

1943-ம் ஆண்டு அக்டோபர் 21-ல், சிங்கப்பூரில் நடந்த மாநாட் டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29-ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். இதில் போராட்டம் வெடித்தது. இந்த போராட் டத்தில் எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் 2-ம் உலகப் போருக்குப்பின் பல்வேறு போராட்டங்களை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முன்னெடுத்து சென்றார். இவரின் தொடர் போராட் டம் மற்றும் காந்தி, கர்மவீரர் காமராஜர் உள்பட பல்வேறு தலை வர்களின் போராட்டம் காரணமான இந்தியாவிற்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவருடைய இறுதிமூச்சு வரை விடாமல் போராட்டம் நடத்தி வந்தாா். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி விமானம் மூலம் பயணம் மேற்கொண்டார். அப்போது பர்மோசா தீவிற்கு அருகே சென்றபோது விபத்து நடந்ததாகவும், அதில் சுபாஷ் சந்திர போஸ் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போசுக்கு 1992-ம் ஆண்டு பாரத ரத்னா விருதை அளித்து அரசு கவுரவித்தது.

எது எப்படியோ பல்வேறு தலைவர்களின் போராட்டம் மற்றும் தியாகங்கள் மூலம் சுதந்திரம் கிடைத்தது என்பதை நாம் அனை வரும் நினைவில் கொண்டு சுதந்திர தினத்தை போற்றிடுவோம்.


Next Story