வீட்டை அழகாக்கும் செடிகள்


வீட்டை அழகாக்கும் செடிகள்
x
தினத்தந்தி 4 Jun 2023 10:00 PM IST (Updated: 4 Jun 2023 10:01 PM IST)
t-max-icont-min-icon

வீட்டை அலங்கரிப்பதோடு அல்லாமல் அவை உடலுக்கும் மனத்திற்கும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன.

முன்பெல்லாம் வீடு கட்டும்போது செடி கொடிகள் வைப்பதற்கு இடம் விட்டுத்தான் வீடு கட்டுவார்கள். பின்வாசல் முற்றத்தில் காய்கறித் தோட்டம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். இன்றைக்குள்ள இடப்பற்றாக்குறையால் வாங்கும் இடத்தை முழுவதும் ஆக்கிரமித்து வீடு கட்ட வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் மாடியில் தோட்டம் அமைத்துக்கொள்கிறோம்.

வீட்டுக்குள்ளே வளரக்கூடிய சில செடிகளும் இன்றைக்கு நர்சரிகளில் கிடைக்கின்றன. வீட்டை அலங்கரிப்பதோடு அல்லாமல் அவை உடலுக்கும் மனத்திற்கும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன. அவற்றுள் பிரசித்தி பெற்றவை ஸ்பைடர் பிளாண்ட், பேர்ன்ஸ், ஐவி, கமுகு மரம், கோல்டன் போதோஸ், கற்றாழை, பீஸ் லில்லி, மார்ஜினட்டா, ஸ்நேக் பிளாண்ட், சைனீஸ் எவர்க்ரீன் ஆகியவை. இந்தச் செடிகள் வீட்டில் உள்ள மாசுக்களைச் சுத்தமாக வெளியேற்றும். வீட்டிற்கு அழகையும் கொடுக்கும்.

இவற்றுக்கு குறைவாகத் தண்ணீர் விட்டாலேயே போதுமானது. தண்ணீரை தெளித்தாலே போதும். வாரம் ஒருமுறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, மொட்டை மாடியிலோ வைத்தால் போதும்.

1 More update

Next Story