சப்ஜா விதைகள்


சப்ஜா விதைகள்
x

திரிநூற்று பச்சிலை அல்லது கரந்தை அல்லது துன்னுத்து பச்சிலை என அழைக்கப்படும் தாவரத்தின் விதைகளே சப்ஜா விதைகள் அல்லது சர்பத் விதைகள் என அழைக்கப்படுகிறது.

இதிலிருக்கும் வைட்டமின்கள் ஏ பி சி மற்றும் சல்ஃபர், துத்தநாகம், ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்றவை உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து வயிற்றுப் புண்களை சரி செய்து மலச்சிக்கலை அகற்றுகிறது. கிராமங்களில் எளிதாக கிடைக்கும் இந்த தாவரத்தின் விதைகள் நீரில் ஊற வைத்து சர்பத்களில் மிதக்க விடப்படுகிறது.

தற்போது குளிர்பானங்களில் சப்ஜா விதைகள் இல்லாமல் பரிமாறப்படுவது அபூர்வம். வடஇந்தியாவில் ரோஸ் வாட்டர் சர்பத், ஆம் பானா, இம்லி சர்பத்(புளி) மற்றும் பலூடா சர்பத், டெல்டா பகுதியில் நார்த்தங்காய் சர்பத், மதுரை இளநீர் சர்பத், தென் தமிழகத்தில் நுங்கு சர்பத், கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் என இடங்களுக்கு தகுந்தவாறு சர்பத் தனது சுவைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

இந்த சர்பத் வெயிலுக்கு இதமளிக்கும் பானம் என்பதைவிடவும் செய்வதற்கு எளிமையானதும் உடலுக்கு எந்த தீமையும் விளைவிக்காதவை என்பதில் சந்தேகமே இல்லை. ஆக இந்த கோடைக்கு சர்பத் பருகி பாபர் ஸ்டைல் விருந்தோம்பலுக்கும் பழகுவோம்.


Next Story