அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் நூல் 'சதுரகராதி'
வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல் சதுரகராதி.
பண்டைய நிகண்டு முறையைக் கடந்து, அகராதி என்றொரு புது வகைப் படைப்பு தமிழில் தோன்ற அவர் காரணமானார். வீரமாமுனிவர் 1710-ம் ஆண்டு தமிழகம் வந்தார். 1732-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி சதுரகராதி நிறைவுற்றதை வீரமாமுனிவர் அந்நூலின் இறுதியில் குறிப்பிட்டுள் ளார்.சதுரகராதி முதலில் 1919-ம் ஆண்டில் அச்சு நூலாக வெளியிடப் பட்டது.
ஒரு மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் தொகுத்து, அவற்றுக்கான பொருளை அதே மொழியிலோ, வேறொரு மொழியிலோ எடுத்தது அகராதி ஆகும். சொல்லின் பொரு ளோடு அதன் உச்சரிப்பு, தோற்றம், இலக்கியத்தில் வந்துள்ள இடம், அது வழங்கும் நாடு முதலியனவும் அகராதியில் குறிக்கப்படும். இந்த அகராதிக்கு காலந்தோறும் பல பதிப்புகள் வந்துள்ளன. பின்னால் வளர்ந்து பெருகிய தமிழ் அகரமுதலிகளுக்கு எல்லாம் மூல நூலாய் விளங்குவது சதுரகராதியே.
சதுரகராதியை உருவாக்குவதற்குத் தாம் நிகண்டு களைப் பயன்படுத்தியதாக வீரமாமுனிவரே நூலின் முகவுரையில் கூறுகிறார். பழைய நூல்களில் வந்த பிழைகளை நீக்கி, வடமொழி சொற்களை அம்மொழி அறிஞர் துணைகொண்டு திருத்தி, சதுரகராதி என்னும் கருவூலத்தை வளம்பெறச் செய்ததாகக் கூறுகிறார்.
சதுரகராதியில் ஒவ்வொரு பொருளுக் கும் பல கோணங்களில் இருந்து விளக் கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெடில், கீழெதுகை, தொடைப்பதம், அனுபந்த அகராதி என்ற உட்பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன.
செய்யுள் வடிவில் அமைந்த நிகண்டு களில் இருந்து தமிழரை விடுவித்து, எதுகை தேடி சொற்பொருள் காணும் சிரமம் தவிர்த்து, அகர வரிசையில் எளிதாக பொருள் காண வீரமாமுனிவர் வழிசெய்தார்.
சதுரகராதியில் பெயர்ச் சொற்களாக ஏறக் குறைய 12 ஆயிரம் சொற்கள் உண்டு. சதுரகராதிக்கு எழுதிய லத்தீன் முன்னுரையில் வீரமாமுனிவர் பொதுத்தமிழ் அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் லத்தீனிலும், பிரஞ்சிலும், போர்த்துக் கீசியத்திலும் விளக்கம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
கி.பி 1824-ம் ஆண்டு முழு வடிவில் தொகுக்கப்பட்டு பதிப்பிக் கப்பட்ட சதுரகராதி நூலில் ஒவ்வொரு பிரிவின் பின்னும் துணைப்பகுதி யும், பிழை நீக்கப் பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த துணைப்பகுதியில் சில சொற்களுக்குக் கூடுதலாக உள்ள பொருள்களும் இலக்கணக்குறிப்பு களும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.