'சூப்பர் நோவா' தெரியுமா..?
விண்மீன்கள் மிகக் கடுமையாக வெடிக்கும். அவ்வாறு வெடித்தபின் அதன் ஒளி முன்பு இருந்ததைவிடப் பல நூறு கோடி மடங்கு அதிகரிக்கும். இதை ‘சூப்பர் நோவா’ என அழைக்கின்றனர்.
* பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தைப் போலவே வடிவமைக்கப்பட்ட கோபுரங்கள் உலகில் பல நாடுகளில் உள்ளன. ஜப்பானில் உள்ள டோக்கியோ டவர், ஈபிள் கோபுரத்தைப் போலவே முழுமையாக வடிவமைக்கப்பட்டது. ஈபிள் கோபுரத்தின் பாதி பாகம், அமெரிக்காவின் நெவாடாவில் லாஸ்வேகாஸ் ஓட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* பண்டைய எகிப்தியர்கள் வெங்காயத்தை விரும்பிச் சாப்பிட்டனர். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு உதவும் சக்தியும், நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும் வெங்காயத்திற்கு உண்டு என நம்பினர். தங்கள் கல்லறைகளில் வெங்காயத்தின் ஓவியத்தை வரைந்து வெங்காயத்தை சிறப்பித்தனர்.
* குறிப்பிட்ட ஒரு பறவையின் முட்டைகளைச் சேகரிப்பது அல்லது ஆராய்வது Oology என அழைக்கப்படுகிறது.
* புல்லட் (Bullet) என்ற ஆங்கிலச் சொல் பிரெஞ்சு சொல்லிலிருந்து பிறந்தது. இதற்கு சிறிய பந்து என்று பொருள்.
* பண்டைய ரோமானியப் போர்க் கடவுள் மார்ஸ். இவர் ரோமாபுரியின் காவல் தெய்வம். ரோமானியர்கள் செவ்வாய்க் கிரகத்திற்கு மார்ஸ் எனப் பெயரைச் சூட்டி தங்கள் கடவுளுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
* விண்மீன்கள் மிகக் கடுமையாக வெடிக்கும். அவ்வாறு வெடித்தபின் அதன் ஒளி முன்பு இருந்ததைவிடப் பல நூறு கோடி மடங்கு அதிகரிக்கும். இதை 'சூப்பர் நோவா' என அழைக்கின்றனர்.
* மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோலின் நிறமும், கண்களும் மஞ்சளாக மாறிவிடும். இதனாலேயே இந்தக் காய்ச்சலுக்கு 'மஞ்சள் காய்ச்சல்' என்ற பெயர் வந்தது.
* சூரியக் குடும்பத்தின் மிக உயரமான மலை, செவ்வாய் கிரகத்தில் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் 'ஒலிம்பஸ் மான்ஸ்' என்ற பெரிய எரிமலை உள்ளது. இது எவரெஸ்ட் சிகரத்தைவிட மூன்று மடங்கு உயரமானது.
* பசிபிக் பெருங்கடலில் உள்ள 'மரியானா ட்ரெஞ்ச்' 10.994 கி.மீ ஆழமுள்ளது. இதுவே உலகின் மிக ஆழமுள்ள பகுதியாகும்.
* நாம் எல்லோரும் பூமி என்ற கிரகத்தில் பயணிக்கும் விண்வெளிப் பயணிகள். பூமி தன் அச்சில் மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் செல்கின்றது. ஆனால் இதை நம்மால் உணர முடியாது.
* சனிக்கிரகத்திற்கு பல நிலவுகள் உள்ளன. இதில் டைட்டான் பதினைந்தாவது நிலவு. சூரிய மண்டலத்தின் கால நிலைக்கு ஏற்றபடி முழுமையாக வளர்ச்சியடைந்த நிலவு இது.
* வாழை மரம் என்று நாம் அழைத்தாலும் அது மரமல்ல. அது ஒரு மூலிகைச் செடி. ஏனெனில் அதனுடைய தண்டு உண்மையான மரத் திசுக்களைக் கொண்டதல்ல. வாழை ஒரு பழமாகவும், மூலிகையாகவும் கருதப்படுகிறது.
* மலேரியாவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் கொய்னா என்ற மருந்து, சின்கோனா மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது. பெரு நாட்டின் மலைப்பகுதிகள் இதன் தாயகம் ஆகும். இப்போது இது இந்தியாவிலும், ஜாவா தீவிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் விளைகிறது. மலேரியாவைத் தவிர தொண்டை, சதை சம்பந்தமான சில நோய்களுக்கும் இது மருந்தாகிறது.