தமிழர்களின் கட்டிடக்கலை


தமிழர்களின் கட்டிடக்கலை
x

தமிழக கட்டிட கலை என்பது பண்டைய கால தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்பு செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும்.

கோவில்கள்

தமிழர்கள் நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் நிலையாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டை கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர் நிலையை எட்டியவர்களாக இருந்தனர். இத்தகைய பின்னணியிலே மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், புனித ஸ்தலங்களும் பலவும் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்து போகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.

6-ம் நூற்றாண்டுக்கு பின்னரே தமிழ்நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக்கட்டிடங்களில் மிக பெரும்பாலானவை கோவில்களே. இவை கட்டிட கலையின் உயர் மரபை சேர்ந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாக சாதாரண மக்களுக்கான வீடுகளையும், கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது.

திராவிட கட்டிடக்கலை

6-ம் நூற்றாண்டின் தொடங்கிய கற்கட்ட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இந்த தமிழர் நாகரிகத்தை திராவிட கட்டிடக்கலை என்று அழைத்தார்கள். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளை சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய எல்லாவகை கட்டிடக்கலைகளையும் தமிழர் கட்டிடக்கலை எனப்படலாம்.

வீடுகள் அமைப்பதில் சில முறைகள் அக்காலத்தில் இருந்தன என்று குறிப்பிடுகிறார் டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர். நெடுநெல்வாடையில் பெரும் பெயர் மன்னர்கொப்ப மனைவகுத்து என்பதனால் அவர்களுக்கேற்றபடி மனைகள் அமைக்கும் வழக்கம் இருந்தது என்பதை அறியலாம்.

வீடுகள் கட்டுவதற்கு அஸ்திவாரம் போடும் காலம் நெடுநெல்வாடையில் காணப்படுகிறது. கோபுரங்களும், வாயில் மாடங்களும், நிலா முற்றங்களும், அறைகளும் அமைக்கப்பட்டன. வீடுகளின் நிலைகளின் சித்திர வேலைகள் செய்யப்பட்டிருந்தன. மாடங்களாகவே சில வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

காற்று ஓட்டத்திற்காக வீட்டின் சுவர்களில் பலவகை சாரங்கள் வைப்பதுண்டு. இவை கால தர் என்று கூறப்படும். கால் - காற்று, அதர் : வழி அதாவது காற்று போகும் வழி என்று பொருள். இவ்வாறு தமிழர்களின் தமிழக கட்டிட கலை சிறந்து விளங்குகிறது.


Next Story