பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம்


பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம்
x

பூமராங் நெபுலா- பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம் இதுதான்.

சீனாவிலுள்ள க்யூங்டோவா-ஹைவான் சாலைப் பாலத்தின் நீளம் 42.4 கிலோமீட்டர். 2007-ல் தொடங்கி, 2011-ல் கட்டி முடிக்கப்பட்டது இப்பாலம்.

போலி மதுபானங்களைக் கண்டறியவும் லேசர் தொழில்நுட்பம் உதவும்.

2050-ம் ஆண்டுக்குள், நம் மூளையிலுள்ள அத்தனை தகவல்களையும் ஒரு கணிப்பொறிக்குள் 'பேக் அப்' செய்துவிட முடியும் என எதிர்காலவியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

2009-ல் வட கொரியாவில் நிலத்தடி அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாதிக்கப்படும் பரப்பளவு அடிப்படையில், நெதர்லாந்திலேயே மிக அதிக சூறாவளிகள் ஏற்படுகின்றன. அங்கு ஒவ்வொரு 1,991 சதுர கிலோமீட்டருக்கு ஒரு சூறாவளி. சூறைப்புயல்களுக்குப் புகழ்பெற்ற அமெரிக்காவிலோ, இது 8,187 ச.கி.மீ-க்கு ஒன்றாக இருக்கிறது.

பூமராங் நெபுலா-பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம் இதுதான். பூமியிலிருந்து 5 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிற இதன் வெப்பநிலை மைனஸ் 272 டிகிரி செல்சியஸ். இதுஹைட்ரஜனையே உறைய வைக்கிற அளவுக்கு குளிர் நிறைந்திருக்கும்.

ஒரு விண்கல்லில், சூரிய மண்டலத்தின் வயதை விடவும் பழமையான வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84.01 ஆண்டுகள் ஆகின்றன.


Next Story