'கொட்டாவி' விடுவதற்கான காரணம் என்ன..?


கொட்டாவி விடுவதற்கான காரணம் என்ன..?
x
தினத்தந்தி 29 Sep 2023 4:00 PM GMT (Updated: 29 Sep 2023 4:00 PM GMT)

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து வாய், மூக்கு வழியாக ஒரே நேரத்தில் சுவாசிக்கும் ஒரு நிகழ்வு. நம்மில் பலர் அடிக்கடி கொட்டாவி விடுவோம்.

நாம் வாழ்நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தடவை கொட்டாவி விடுகிறோம். ஆனால் ஏன், எதனால் கொட்டாவி விடுகிறோம் என்று அறிவியலால் கூட உறுதியாகச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது. இருந்தபோதிலும் கொட்டாவிக்கான காரணங்களை நிபுணர்கள் அடுக்குகிறார்கள். முதலில் என்ன மாதிரியான சூழலில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து கொட்டாவி வருகிறது. நம்முடைய உடல் சோர்வாக அல்லது சலிப்பாக இருக்கும்போது மூளையின் வெப்பநிலை உயரும்.

அப்போது நமக்குக் கொட்டாவி வரும். தவிர, அடைக்கப்பட்ட அறைக்குள் நீண்ட நேரம் இருக்கும்போது குளிர்ந்த காற்றைச் சுவாசிக்கிறோம். அப்போது மூளை குளுமை அடைந்து நமக்குக் கொட்டாவி வரும். ஒருவர் கொட்டாவி விடுவதை பார்க்கும்போது நமக்கும் கொட்டாவி வருகிறது. தவிர, விலங்குகளுக்கும் கொட்டாவி விடும் பழக்கம் உண்டு. இதைப் படிக்கும்போது நீங்களும் கொட்டாவி விடலாம்.


Next Story