தண்ணீர் இல்லாமல் வாழும் 62 புதிய தாவரங்கள் கண்டுபிடிப்பு


தண்ணீர் இல்லாமல் வாழும் 62 புதிய தாவரங்கள் கண்டுபிடிப்பு
x

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உயிரியல் ஆய்வாளர்கள் 62 புதிய வகை தாவரங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தாவரங்கள் கடுமையான நீரிழப்பையும் தாங்கக்கூடியவை. வறட்சியை தாங்கும் வாஸ்குலர் இனத்தைச் சேர்ந்தவை. கடுமையான நீர் பற்றாக்குறைக்கு மத்தியிலும் உயிர்வாழும் திறன் கொண்டவை என்றும் கூறியுள்ளனர்.

இந்த இன தாவரங்கள் தண்ணீர் இல்லாத சூழலில் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுவதில்லை. வறட்சியை தாக்குபிடித்துக்கொண்டு மீண்டும் தண்ணீர் கிடைக்கும்போது புத்துயிர் பெறும் ஆற்றல் கொண்டவை என்றும் அறியப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தாவரங்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள விவசாய பகுதிகளில் பரந்த அளவிலான பங்களிப்பை கொண்டிருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அகார்கர் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த தாவரங்களை கண்டறிந்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த தாவர இனங்களில் 16 இந்திய இனங்கள் உள்ளன. 12 இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மட்டுமே சொந்தமானவை. அங்குதான் அவை வாழ்விடத்தை கொண்டுள்ளன.


Next Story