காபி குச்சியில் கலை வடிவம்


காபி குச்சியில் கலை வடிவம்
x

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடத்தை சேர்ந்த பிரசாந்த் கட்கரா, காபியில் சர்க்கரை கலப்பதற்கு பயன்படுத்தப்படும் குச்சிகளை கொண்டு அழகிய கலை படைப்புகளை உருவாக்கி வருகிறார்.

கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் கட்டுமான நுட்பங்களை நுணுக்கமாக அறிந்து வைத்திருப்பார்கள். கட்டுமானம் சார்ந்து படித்தவர்கள்தான் கட்டிடக்கலை நுட்பங்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை. அந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களும் கட்டுமானத்தின் மீது கொண்டிருக்கும் ஈடுபாடு காரணமாக கலைநயத்துடன் கட்டமைப்புகளை உருவாக்கி அசத்திவிடுகிறார்கள்.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடத்தை சேர்ந்த பிரசாந்த் கட்கராவும் அந்த ரகத்தை சேர்ந்தவர்தான். கட்டுமான தொழிலாளியான இவர் தனது ஓய்வு நேரத்தை பழமையான கட்டமைப்புகளை கொண்ட மாதிரி உருவங்களை உருவாக்குவதற்கு செலவிடுகிறார்.

ஆரம்பத்தில் தீக்குச்சிகளை கொண்டு புகழ் பெற்ற கட்டுமானங்களின் மாதிரி வடிவங்களை வடிவமைத்தவர் தற்போது காபியில் சர்க்கரை கலப்பதற்கு பயன்படுத்தப்படும் குச்சிகளை கொண்டு அழகிய கலை படைப்புகளை உருவாக்கி வருகிறார்.

இவரது கைவண்ணத்தில் ஈபிள் கோபுரம், பொற்கோவில், கேதார்நாத் கோவில், தாஜ்மஹால், மும்பை நுழைவு வாயில், ஹம்பி ரதம் உள்பட ஏராளமான புகழ்பெற்ற அடையாள சின்னங்கள் கலைநயத்துடன் காட்சி அளிக்கின்றன.

"கலை மீதான ஆர்வம், செலவுகளைப் பொருட்படுத்தாமல் தலைசிறந்த படைப்புகளை உருவாக்க தூண்டுகிறது. இப்போது குச்சிகளை சேகரிப்பதற்கும் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. நான் ஆன்லைனிலேயே குச்சிகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்கிறேன். ஒரு உருவத்தை வடிவமைப்பதற்கு சராசரியாக 5 பண்டல் குச்சிகள் தேவைப்படும்.

இருப்பினும் உருவத்தின் தன்மையை பொறுத்து குச்சிகளின் தேவை மாறுபடும். கூலி தொழிலாளியாக வேலை செய்தாலும் கலை மீதான காதல் தான் என்னை உருவங்களை வடிவமைக்க தூண்டிக்கொண்டே இருக்கிறது'' என்கிறார்.


Next Story