சமையல் டிப்ஸ்


சமையல் டிப்ஸ்
x

சமையல் டிப்ஸ்

* மிளகாய்ப்பொடி டப்பாவில் சிறிது கட்டிப்பெருங்காயத்தை போட்டு வைத்தால் மிளகாய்ப் பொடியும் மணக்கும், விரைவிலும் கெடாது.

* சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி காற்றுப்புகா டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால், நான்கு நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

* மிளகாய் வற்றலுடன் சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் கமறாது.

* மிக்ஸி ஜாரில் மசாலாப் பொருட்களை பொடித்தவுடன் எவ்வளவு தான் அலம்பினாலும் வாசனை போகாது. கொஞ்சம் பிரெட்டை ஜாரில் போட்டு பொடித்தால் வாசனை அறவே போய் விடும்.

* தோசைக்கு மாவு அரைக்கும்போது இரண்டு உருளைக்கிழங்குகளை தோல் சீவி வெட்டி, சேர்த்து அரையுங்கள். மறுநாள் தோசை வார்த்தால், பொன்னிறமாய், ஓட்டல் தோசை போல மிருதுவாக வரும்.

* வாட்டர் பாட்டிலில் கல் உப்பு போட்டு எல்லா இடங்களிலும் படுமாறு குலுக்கி விட்டு சோப் போட்டு அலம்பினால் புதிது போல் இருக்கும்.

* உணவை பார்சல் கட்ட பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து பச்சை வாழை இலையை வெந்நீரில் தோய்த்த பின் கட்டினால் கிழியாமல் அழகாக 'பேக்' செய்ய வரும்.

* உளுந்து, அரிசியுடன் கைப்பிடி அவல், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

* பிஸ்தா, முந்திரி, பாதாம் பருப்புகளை வெறும் வாணலியில் சூடாக்கி, பொடி செய்து வைத்துக்கொண்டு, பாயசம், ப்ரூட் சாலட் மீது தூவினால் அழகாக ஜொலிக்கும், ஆரோக்கியமும் கூடும்.

* சப்பாத்திக்கு மாவு தளர்வாகவும் பூரிக்கு கெட்டியாகவும் பிசைய வேண்டும்.

* துவரம் பருப்புடன் தேங்காயை துருவி கிள்ளிப்போட்டு வேகவைத்தால் குழைவாக இருக்கும். விரைவிலும் வேகும்.

-ஸ்ரீ.மல்லிகா குரு,

மேற்கு மாம்பலம், சென்னை.


Next Story