சமையல் டிப்ஸ்


சமையல் டிப்ஸ்
x

சுவையான சமையல் டிப்ஸ் ...

பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை நறுக்கி சேர்க்கலாம்.

சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது கசகசாவை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நலம் சேர்க்கும்.

மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாயை நன்றாக வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு நல்ல நிறமாக காட்சி அளிக்கும். ருசியாகவும் இருக்கும்.

பாகற்காய் குழம்பில் கேரட் ஒன்றை துண்டுகளாக நறுக்கிப்போட்டால், கசப்புத்தன்மை அதிகம் இருக்காது.

அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

ரசம் கொதிக்கும்போது அதில் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாய் இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால், பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.

சர்க்கரை இருக்கும் டப்பாவில் இரண்டு, மூன்று லவங்கத்தை போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது சாதம் சூடாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கசப்புத்தன்மை கூடும்.

* பாலை நன்கு கொதிக்க காய்ச்சி பயன்படுத்த வேண்டும். அதாவது சுண்டக் காய்ச்ச வேண்டும். அதுதான் சரியானது.

* தேங்காய்க்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொரகொரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்து சமைத்தால் சுவை புதுமையாக இருக்கும்.

* கீரை சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சமைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் ருசியாகவும் இருக்கும்.

-மா.முத்துலெட்சுமி, அண்ணா நகர், புதுக்கோட்டை.


Next Story