வளரும் காலணி


வளரும் காலணி
x

காலணிகள் வாங்க முடியாத நிலையில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு என் கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமையும் என்கிறார், கென்டன் லீ.

கென்யா போன்ற ஏழை நாடுகளில் வசிக்கும் மக்கள் அடிக்கடி காலணிகளை மாற்றுவது சாத்தியமில்லாதது. அதனை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். அங்குள்ள நைரோபியை சேர்ந்த கென்டன் லீ, ஒரு சிறுமி சிறிய காலணிகளை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததை பார்த்தார்.

அந்த காலணிகள் இரண்டும் சிறுமியின் கால் பாதங்களை விட அளவில் மிக சிறியவை. அந்த சிறுமி வளர்ந்ததற்கு ஏற்ப புது காலணிகள் வாங்கிக்கொடுப்பதற்கு அவள் வீட்டில் வசதி இல்லை. அதனால் அந்த காலணியைத்தான் நீண்ட நாட்களாக காலில் அணிந்திருப்பது கென்டன் லீக்கு தெரியவந்தது.

ஐந்து வயது வரை ஒரே காலணியை அணிவதற்கு ஏற்ப அளவுகளை 'அட்ஜெஸ்ட்' செய்யும் வகையிலான காலணியை தயாரிப்பதற்கு அவர் முடிவு செய்தார். 'வளரும் ஷூக்கள்' என்ற பெயரில் காலணிகளை உருவாக்கி புழக்கத்திற்கும் கொண்டு வந்துவிட்டார். இந்த காலணிகளை குழந்தைகள் 5 ஆண்டுகள் வரை காலில் அணிந்து கொள்ளலாம். அவர்களின் பாதங்களின் அளவுக்கு ஏற்ப தளர்த்திக்கொள்ளலாம்.

உலகெங்கிலும் காலணிகள் வாங்க முடியாத நிலையில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு என் கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமையும் என்கிறார், கென்டன் லீ.

1 More update

Next Story