இந்திய எல்லையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்


இந்திய எல்லையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்
x

கலாசார பன்முகத்தன்மைக்கு நுழைவுவாயில்களாக அமைந்திருக்கும் இடங்கள் உங்கள் பார்வைக்கு....

எல்லைப்பகுதிகள் என்றாலே இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் இடங்களாக அறியப்படுகின்றன. அதற்கு மாறாக இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் அமைதி தவழும் சூழலில் எல்லைக்கு அருகே சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

பாம்பன் பாலம் (இந்தியா-இலங்கை எல்லை):

இந்த பாலம் முன்பு இந்தியாவையும், இலங்கையையும் இணைத்திருந்திருக்கிறது. தற்போது வரலாற்று பாரம்பரிய இடமாக விளங்குகிறது.

இங்குள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவளப்பாறைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அவற்றை காண்பதற்கு படகு சவாரியும் நடைபெறுகிறது. அது மாறுபட்ட கடல் பயண அனுபவத்தை கொடுக்கும்.

பாங்காங் ஏரி: (இந்தியா-சீனா எல்லை):

லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரி இது. பறவை இனங்களின் புகலிடமாக விளங்கும் இந்த ஏரி இந்தியா-சீனா எல்லையில் பரவியுள்ளது. அதனால் இந்த ஏரியின் குறிப்பிடத்தக்க பகுதி சீன எல்லைக்குள் அமைந்துள்ளது.

ஏரியை சூழ்ந்திருக்கும் வான் அழகும், சுற்றியுள்ள மலைகளும், அங்கு நிலவும் அமைதியான சூழலும் மாறுபட்ட தேசத்துக்குள் நுழைந்த உணர்வை கொடுக்கும்.

எல்லைப்பகுதிகள் என்றாலே இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் இடங்களாக அறியப்படுகின்றன. அதற்கு மாறாக இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் அமைதி தவழும் சூழலில் எல்லைக்கு அருகே சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுள் கலாசார பன்முகத்தன்மைக்கு நுழைவுவாயில்களாக அமைந்திருக்கும் இடங்கள் உங்கள் பார்வைக்கு....

நாது லா கணவாய்-மானசரோவர் (இந்தியா-சீனா எல்லை):

14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள நாது லா கணவாய், இந்திய-சீன எல்லையில் தனித்துவமான இடமாக விளங்குகிறது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை இங்கு நடப்பது பதற்றமான எல்லைப்பகுதியில் அமைதியை தவழ செய்கிறது.

எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியின் பக்கத்தில் இந்திய, சீன வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மற்ற பகுதிகளை விட இங்கு மென்மையான சூழல் நிலவுகிறது.

மால்டா (இந்தியா-வங்காளதேச எல்லை):

'இந்தியாவின் மாம்பழ நகரம்' என்று அழைக்கப்படும் மால்டா நகரம் வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு மகாநதி மற்றும் காளிந்தி நதிகள் சங்கமிக்கும் இடங்களும், அதனை சூழ்ந்திருக்கும் கட்டிடக்கலையும் கூடுதல் அழகு சேர்க்கக்கூடியவை. ஹிம்சாகர் வகை மாம்பழங்கள் உற்பத்திக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அதற்கு அங்குள்ள மண்ணின் தன்மைதான் காரணம்.

வாகா (இந்தியா -பாகிஸ்தான் எல்லை):

இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள வாகாவில் நடக்கும் தேசியக் கொடி இறக்கும் விழா பிரபலமானது. இரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்வை விமரிசையாக நடத்துவார்கள்.

இந்த சடங்கு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இணக்கமான பிணைப்பை ஏற்படுத்துகிறது.

நெலாங் பள்ளத்தாக்கு (இந்தியா-சீனா எல்லை):

கங்கோத்ரி தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள நெலாங் பள்ளத்தாக்கின் வறண்ட நிலப்பரப்பும், மலைகளும், வான் மேகங்களும் ஒருங்கே சந்திக்கும் திபெத்திய பீடபூமியின் காலநிலையும் மனதை ஈர்க்கக்கூடியது.

இந்தியா-சீனா எல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பள்ளத்தாக்கு வனவிலங்கு ஆர்வலர்களுக்கு பிரியமான இடமாக விளங்குகிறது. இங்கு பனிச்சிறுத்தை மற்றும் அசாதாரணமான பறவை இனங்களை காண முடியும். இங்கு செல்ல அனுமதி சீட்டும், உடல் தகுதி சான்றிதழும் தேவைப்படும்.

தார்ச்சுலா (இந்தியா-நேபாள எல்லை):

இது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பஞ்சசூலி சிகரம் பனி படந்த ரம்மியமான சூழலை கொண்டது. சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியும் மனதை மயக்கும் அமைதியான பின்புலத்தை கொண்டது.

உலகிலேயே மிக உயரமான பகுதியில் அமைந்திருக்கும் நன்னீர் ஏரியாகவும் கருதப்படுகிறது. அந்த ஏரியின் அழகும், நீர் பரப்பின் வசீகரமும் கண்களுக்கு விருந்து படைக்கும். காளி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம்தான் தார்ச்சுலாவை நேபாளத்துடன் இணைக்கிறது.


Next Story