ஏசர் ஒன் 8, ஏசர் ஒன் 10 டேப்லெட் அறிமுகம்


ஏசர் ஒன் 8, ஏசர் ஒன் 10 டேப்லெட் அறிமுகம்
x

ஏசர் நிறுவனம் இரண்டு மாடல் (ஏசர் ஒன் 8 மற்றும் ஏசர் ஒன் 10) டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு மாடல்களில் மீடியா டெக் எம்.டி 8768 ஆக்டா கோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒன் 8 8.7 அங்குல திரை, ஒன் 10 மாடல் 10.1 அங்குலத் திரையும் கொண்டுள்ளது.

ஏசர் ஒன் 8 மாடலில் 3 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல்கள் வந்துள்ளன. ஏசர் ஒன் 10 மாடலில் 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம் திறனும் 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல்களும் வந்துள்ளன.

இதன் நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டு பயன்படுத்துவதன் மூலம் 1 டி.பி. வரை அதிகரித்துக் கொள்ளலாம். 4-ஜி வோல்டே மூலம் செயல்படுபவை. புளூடூத், வை-பை இணைப்பு மூலம் இதை இயக்க முடியும். ஜி.பி.எஸ். நேவிகேஷன் வசதி கொண்டது. இவற்றில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏசர் ஒன் 8 மாடலின் விலை சுமார் ரூ.12,990.

ஏசர் ஒன் 10 மாடலின் விலை சுமார் ரூ.17,990.


Next Story