கிஸ்பிட் குளோ இஸட் ஸ்மார்ட் கடிகாரம்
கிஸ்மோர் நிறுவனம் புதிதாக கிஸ்பிட் குளோ இஸட் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது 1.78 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.1,499. இதில் உள்ள பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்யப் பட்டால் 15 நாட்கள் வரை செயல்படும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் செயல்படக்கூடியது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.
இதய துடிப்பு, தூக்க குறைபாடு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட விவரங்களைத் துல்லிய மாகத் தரும். 100-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இது துல்லியமாகக் காட்டும். நீலம், கருப்பு மற்றும் மெரூன் நிறங்களில் வந்துள்ளது.
Related Tags :
Next Story