ஹைசென்ஸ் 120 அங்குல டி.வி.


ஹைசென்ஸ் 120 அங்குல டி.வி.
x

ஹைசென்ஸ் இந்தியா நிறுவனம் புதிதாக 120 அங்குல லேசர் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் டொர்னாடோ என்ற பெயரில் 50 அங்குலம் மற்றும் 55 அங்குல கியூலெட் டி.வி.யையும், ஏ 6 கே என்ற பெயரில் 4-கே எல்.இ.டி. திரை கொண்ட ஸ்மார்ட் டி.வி.க்களையும் அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் மாடலான 120 அங்குல டி.வி.யில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்களை உறுத்தாத வகையில் வெளிச்சத்தை வெளிப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டது. டால்பி சவுண்ட் சிஸ்டம் இருப்பதால் திரையரங்குகளில் காட்சிகளைப் பார்ப்பதைப் போன்ற அனுபவத்தைப் பெறலாம். டொர்னாடோ மாடல்களில் டி.வி. நிகழ்ச்சிகளை டிஜிட்டல் நுட்பத்தில் பார்ப்பதற்கும், விளையாட்டு நிகழ்ச்சி களைக் காண்பதற்கும், 4-கே ரெசல்யூஷனில் படங்களைப் பார்ப்பதற்கும் ஏற்ற வகையிலான வடிவமைப்பு கொண்டது.

120 அங்குல ஹைசென்ஸ் லேசர் டி.வி. விலை சுமார் ரூ.4.99 லட்சம்.

டொர்னாடோ 55 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.49,999.

50 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.47,999. 43 அங்குல மாடலின் விலை ரூ.28,999.


Next Story