செயற்கை நுண்ணறிவு மனித வடிவிலான ரோபோக்கள் மனிதர்களை விட விலை குறைவாக இருக்கும் ; பில் கேட்ஸ் கணிப்பு


செயற்கை நுண்ணறிவு மனித வடிவிலான ரோபோக்கள் மனிதர்களை விட விலை குறைவாக இருக்கும் ; பில் கேட்ஸ் கணிப்பு
x
தினத்தந்தி 26 May 2023 5:30 AM GMT (Updated: 26 May 2023 6:00 AM GMT)

கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் அமேசான் அனைத்தும் தற்போது செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன.

வாஷிங்டன்

முன்னோக்கிய செயற்கை நுண்ணறிவு 2023 மாநாட்டில் பேசிய மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பில் கேட்ஸ் கூறியதாவது:-

தொழில்நுட்பத் துறை சிறந்த 'செயற்கை நுண்ணறிவு முகவரை' உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அதன் வருகை, இன்றைய இணைய தேடுபொறிகளை ஒழித்துவிடும்.

புதிய தொழில்நுட்பம் உற்பத்தித் துறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் பாதிக்கும். இணையத்தில் பெரிய மாற்றங்கள் வரும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் செயல்படும் மனிதனைப் போன்ற ரோபோக்கள் எதிர்காலத்தில் வர உள்ளன. அவை மனிதர்களுக்கு வழங்கப்படும் வெகுமதியை விட குறைந்த பணத்தை அவற்றுக்காக செலவழித்தால் போதுமானது.

இப்போதெல்லாம் பயனர்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு இணையதளங்கள் மற்றும் சேவைகளை நம்பியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு பெர்சனல் ஏஜென்ட்டால் யாரிடமும் தொடர்புகொள்ள முடியும். குரல் கட்டளை அல்லது உரைக் கட்டளையைப் பயன்படுத்தி தொடர்புகொள்ள உதவுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இது உருவாக்கப்பட்டவுடன், பல இணையதளங்களில் சிதறிக் கிடக்கும் சேவைகளை ஒருங்கிணைக்க முடியும்.

பெர்சனல் ஏஜென்ட் என்ற கருத்தை சிறந்த முறையில் முன்வைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

முன்னதாக, எலன்மாஸ்க் கோவிட் வருகையை கணித்து கவனத்தை ஈர்த்திருந்தார்.

கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் அமேசான் அனைத்தும் தற்போது பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன.

ஆனால் வெற்றியாளர் கேள்விப்படாத ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருக்கும். இதன் நிகழக்கூடிய வாய்ப்பு சுமார் 50 சதவீதமாக இருக்கும் என கூறினார்.

இதுகுறித்து அமேசான், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை கேட்ஸின் பதிலளிக்கவில்லை.

லிங்க்ட்இன் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ரீட் ஹாப்மேன் இன்பெளெக்ஷனைப் பாராட்ட கேட்ஸ் மறக்கவில்லை. செயற்கை நுண்ணறிவு போட்டியில் நுழைந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக இகேஓ ஒன்றை கொண்டு வந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது மென்பொருளை மனித மனதைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் செயல்முறையாகும்.

மனித மூளையின் வடிவங்களைப் படிப்பதன் மூலமும், அறிவாற்றல் செயல்முறையை பகுப்பாய்வு செய்வதன் மூலமும் இது நிறைவேற்றப்படுகிறது. இந்த ஆய்வுகளின் விளைவாக அறிவார்ந்த மென்பொருள் மற்றும் அமைப்புகளை உருவாக்குகிறது.

இந்த தொழில்நுட்பத்தால் ஏற்கனவே ஏற்பட்ட தீங்குகளையும், இனி வர இருக்கும் ஆபத்துக்களையும் நினைவில் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட தற்சமயம் வரை நான்கில் ஒரு பங்கு வேலைவாய்ப்புகள் இதனால் மாயமாய் மறைந்துள்ளன.



Next Story