லேப்டாப் கூலிங்பேட் அறிமுகம்


லேப்டாப் கூலிங்பேட் அறிமுகம்
x

மின்னணு உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் கிளா நிறுவனம் லேப்டாப்கள் சூடேறுவதைக் குறைக்கும் கூலிங் பேடுகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் லேப்டாப்களைக் குளிர்விக்கும் காற்றாடிகள் உள்ளன. இவை அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. அதிக நேரம் லேப்டாப் உபயோகிக்கும் தொழில்துறையினர், வீடியோகேம் ஆடுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. வீட்டிலிருந்து பணிபுரிவோருக்கும் ஏற்றது. குளிர்ச்சியைத் தரும் வகையில் 4 காற்றாடிகளைக் கொண்டுள்ளது. கிளா ஆர்க்டிக் கே 25 புரோ, கிளா பிராஸ்ட் கே 42, கிளா கிளேசியர் 13, கிளா ஐஸ்பெர்க் எப் 4, கிளா பிரீஸ் சி3 என 5 மாடல்கள் இதில் வந்துள்ளன. இதன் விலை சுமார் ரூ.1,260 முதல் ஆரம்பமாகிறது.


Next Story