போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் புரொஜெக்டர் அறிமுகம்


போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் புரொஜெக்டர் அறிமுகம்
x

போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான பீம் 410 என்ற பெயரிலான புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. வெள்ளை நிற சுவரில் கூட காட்சிகளைக் காணும் வகையில் இதை இயக்க முடியும். ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம், உள்ளீடாக வை-பை இணைப்பு, ரிமோட் கண்ட் ரோல் ஆகிய வசதிகளை இது கொண்டுள்ளது.

1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம் கொண்ட இதில் 6 வாட் ஸ்பீக்கர் உள்ளது. கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த புரொஜெக்டரின் எடை 1.39 கி.கி. இதனால் எளிதில் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதன் விலை சுமார் ரூ.16,999.


Next Story