ரீ சவுண்ட் 2 ஸ்பீக்கர் அறிமுகம்


ரீ சவுண்ட் 2 ஸ்பீக்கர் அறிமுகம்
x

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரீ சவுண்ட் 2 என்ற பெயரில் வெளியிடங் களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இது 15 வாட் திறன் கொண்டது. இதில் ஆர்.ஜி.பி. வண்ண விளக்குகள் உள்ளன. இது புளூடூத் இணைப்பு வசதி மூலம் செயல்படக் கூடியது. மற்றும் ஏ.யு.எக்ஸ். இணைப்பு வசதியும் கொண்டது. மேல்பாகம் பேப்ரிக்கால் ஆனது.

இதில் 2 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 5 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது.

இந்த ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.2,149.


Next Story