சாம்சங் புரொஜெக்டர் அறிமுகம்


சாம்சங் புரொஜெக்டர் அறிமுகம்
x

வீட்டு உபயோக மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் கொரியாவின் சாம்சங் நிறுவனம் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. சுவரிலேயே காட்சிகளைப் பார்க்கும் வகையில் இது மிகச் சிறப்பாக செயல்படும். அதிகபட்சம் 100 அங்குலம் வரை காட்சிகளைத் திரையிட முடியும்.

வீடியோகேம் விளையாட்டு பிரியர்கள் பயன்படுத்தும் வகையில் இதில் 3 ஆயிரத்துக்கும் மேலான வீடியோ கேம் விளையாட்டுகளை விளையாட முடியும். 360 டிகிரி கோணம் வரை இதை சுழற்ற முடியும். இதனால் மேற்கூரையிலும் காட்சிகளைத் திரையிட்டு படுத்துக் கொண்டே காட்சிகளை பார்த்து ரசிக்க முடியும். வை-பை மற்றும் புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. அலெக்ஸா குரல் வழிக் கட்டுப்பாடு மூலமும் இதை செயல்படுத்தலாம்.

இதன் விலை சுமார் ரூ.66,515.


Next Story