லெக்ஸர் விரல் ரேகை யு.எஸ்.பி.


லெக்ஸர் விரல் ரேகை யு.எஸ்.பி.
x

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பாகங்களைத் தயாரிக்கும் லெக்சர் நிறுவனம் ஜம்ப் டிரைவ் எப்.எஸ். 35 என்ற பெயரிலான யு.எஸ்.பி.யை அறிமுகம் செய்துள்ளது.

இதில் விரல் ரேகை உணர் சென்சார் இருப்பது சிறப்பம்சமாகும். இது 150 எம்.பி. முதல் 32 ஜி.பி., 64 ஜி.பி., 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டவையாக வந்துள்ளன. சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்கும் விதமாக இதில் விரல் ரேகை உணர் சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பத்து விரல் ரேகைகளை பதிவு செய்யலாம். இதனால் நம்பகமான நபர்கள் மட்டுமே இந்த தகவல் சேமிப்புக் கருவியிலிருந்து (யு.எஸ்.பி.) தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இதனால் சங்கேத எண் அல்லது சங்கேத வார்த்தைகளை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு விநாடியில் உங்கள் விரல் ரேகையை உணர்ந்து அது செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

32 ஜி.பி. விலை சுமார் ரூ.4,500, 64 ஜி.பி. விலை சுமார் ரூ.6,000. 128 ஜி.பி. விலை சுமார் ரூ.6,750.


Next Story