நிக்கான் இஸட் 8 கேமரா
கேமராக்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் நிக்கான் நிறுவனம் புதிதாக இஸட் 8 என்ற மாடல் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இது மிரர்லெஸ் கேமராவாகும். இதில் புகைப்படங்கள் மட்டுமின்றி வீடியோ காட்சிகளையும் துல்லியமாக பதிவு செய்ய முடியும்.
இதில் 8-கே ரெசல்யூஷனில் காட்சிகள் பதிவாகும். இதன் லென்ஸ்கள் ஆட்டோ போகஸ் தன்மை கொண்டவை. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு செயல்படக் கூடியது. இதில் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்யலாம். 8-கே ரெசல்யூஷனில் ஒன்றரை மணி நேரம் காட்சிகளைப் பதிவு செய்ய முடியும். இயற்கை ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர்களுக்கு இது ஏற்றது. யு.எஸ்.பி. மூலம் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி கொண்டது. எடுத்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் இதில் வசதி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,43,995.