ரெட்மி ஸ்மார்ட் பயர் டி.வி.


ரெட்மி ஸ்மார்ட் பயர் டி.வி.
x

ரெட்மி நிறுவனம் தற்போது 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட 43 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கும் ரெட்மி நிறுவனம் தற்போது டி.வி. தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட 43 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.24,999.

இதில் அமேசான் பயர் இயங்குதளம் உள்ளது. அமேசான் குரல் வழியில் செயல்படும் ரிமோட் கண்ட்ரோல் வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இதில் விவிட் பிக்சர் என்ஜின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காட்சிகள் மிகத் துல்லியமாக, வண்ணங்கள் மாறாமல் தெரியும். இனிய இசையை வழங்க 24 வாட் ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ சிஸ்டத்துடன் செயல்படுகிறது. பயர் டி.வி. செயலி மூலம் 12,000 செயலிகளில் விருப்பமானதைத் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

இதில் முக்கியமான பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லிவ், யூ-டியூப் போன்றவையும் அடங்கும். வை-பை, புளூடூத் 5.0, ஹெச்.டி.எம்.பை, யு.எஸ்.பி., எதர்நெட் இணைப்பு வசதிகளைக் கொண்டது.


Next Story