சாம்சங் செமி ஆட்டோமேடிக் சலவை இயந்திரம்


சாம்சங் செமி ஆட்டோமேடிக் சலவை இயந்திரம்
x

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம் தற்போது செமி-ஆட்டோமேடிக் சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. இவை 8 கிலோ (விலை சுமார் ரூ.15,000) மற்றும் 9 கிலோ (விலை சுமார் ரூ.18,000) அளவு கொண்டவையாக வந்துள்ளன. அழகிய கண்ணாடி கதவுகளைக் கொண்டிருப்பதோடு மென்மையாக மூடும் தன்மை கொண்டவை யாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஹெக்ஸா ஸ்டார்ம் பல்சேட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது துணி துவைப்பதை மேலும் எளிமையாக்கி யுள்ளது. இதில் மேஜிக் மிக்ஸர் எனும் சிறப்பு வசதி உள்ளது. இதன் மூலம் தண்ணீருடன் சலவை தூள் அல்லது சலவை திரவத்தை ஊற்றி கலக்க முடியும். இது வேகமாக சுழன்று சலவை திரவம் முழுவது மாக தண்ணீரில் பரவி துணிகளை வெண்மையாக துவைக்க உதவுகிறது. இதனால் சலவைத் தூள் துணிகளின் மேல் படிவது தவிர்க்கப்படுகிறது. இதில் உள்ள மேஜிக் பில்டர் 180 டிகிரி அளவுக்கு திறக்கும் வசதி கொண்டது. இதில் நான்கு சக்கரங்கள் உள்ளதால், எளிதில் தேவையான இடத்திற்கு நகர்த்திச் செல்ல முடியும்.

இதில் ஆட்டோ – ஸ்டார்ட் நுட்பமும் உள்ளது. இதனால் மின் தடையால் நின்றுபோனால் அதுவே தானாக மின்சாரம் வந்தவுடன் இயங்கத் தொடங்கும். துருப்பிடிக்காத பிளாஸ்டிக் மேல் பாகத்தைக் கொண்டது. கிரே-கருப்பு மற்றும் கிரே-சிவப்பு பேனல் நிறங்களைக் கொண்டதாக இது வந்துள்ளது.


Next Story